Total Pageviews

Tuesday 10 April 2012

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி?

|0 comments
 
 
"உன் துணி அலமாரியைக் (wardrobe) காட்டு, நீ யாரென்று நான் சொல்கிறேன்" என்று ஒரு வெளிநாட்டு அறிஞர் சொன்னார். அதே போல, உன் கணிணியைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன் என்றும் சொல்லலாம். நாள்பட்ட கோப்புகள், பயன்படாத ப்ரோகிராம்கள், வாழ்க்கையில் 3 அல்லது 4 முறை மட்டுமே பார்க்கப் படும் ஆனால் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் புகைப்படங்கள், பாடல்கள், முழுநீள திரைப்படங்கள்.
இது உங்களால் சேர்க்கப்பட்டவை என்றால் உங்கள் கணிணியும் அதன் பங்கிற்கு சிஸ்டம் ஃபைல்ஸ் என்று அழைக்கப்படும் பலவற்றை அப்படியே விட்டு வைத்து விடும். இப்படி இத்யாதி இத்யாதிகளுடன் பழைய பீரோ கணக்காய் இருக்கும் கணியா உங்களுடையது? அதை சற்று சுத்தப் படுத்தி, கொஞ்சம் வேகமாய் ஓடுமாறு முடுக்கி விட விருப்பமா? மேலே படியுங்கள், மன்னிக்கவும், கீழே படியுங்கள்.


*இது ஒரு கெஸ்ட் போஸ்ட். எழுதியது ஞானபூமி

C cleanerஅல்லது க்ராப் க்ளீனர்:

க்ராப் என்றால் குப்பை என்பது ஆங்கில ஸ்லேங்க் (slang).கணிணிக் குப்பையை செவ்வனே நீக்கும் செயலை சிறப்பாகச் செய்யும் க்ராப் க்ளீனர் தான் இப்பதிவின் கதாநாயகன்.

ஒரு வேண்டுகோள்- இதை க்ராப் க்ளீனர் அல்லது Ccleanerஎன்றே விளிப்போம். குப்பை நீக்கி, கக்கை போக்கி, என்று தமிழ்ப் படுத்த (தமிழைப் படுத்த) வேண்டாம். அப்படியே விட்டு விடலாம். வேண்டுமானால் "க்க்" என்று சிறியதாக அழைக்கலாம். ஆனால் உங்களுக்கு விக்குகிறதோ என்று யாரேனும் தண்ணீரைக் கொண்டு வரப் போகிறார்கள்!


எச்சரிக்கை 1:

இதில் உள்ள சில பயன்பாடுகள் விண்டோஸின் ரெஜிஸ்ட்ரி அளவிற்குப் போய் வேலை செய்வதால் ஒரு முறை இதன் உதவி பக்கங்களைப் படித்து விடுவது நல்லது. பயப்பட ஒன்றுமில்லை என்ற போதிலும் விவரம் அறிய உதவும்.

இதன் முகப்பு:



உபயோகம்:

a)Cleaner

CC யை தொடங்கியதும் அது சில முன்மாதிரிகளைக் (default)கொண்டிருப்பது தெரியும். அது கணிணி பயனாளர் அனைவருக்கும் பொதுவாக இருக்கும். அதை அப்படியே விட்டும் விடலாம். உங்களுக்கு மேலும் விவரம் தெரியுமாயின் அதற்கேற்றார்போல நீங்கள் தேர்வு செய்தும் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு சிலர் குக்கீஸ் எனப்படும் குறிப்பிட்ட வெப் சைட் செட்டிங்ஸ் கொண்ட ஃபைல்களை அழிக்க விரும்ப மாட்டார்கள். நீங்கள் ஜிமெயிலைத் திறந்தவுடன் நேராக உங்கள் கணக்கிற்குக் கொண்டு செல்லும் "Stay signed in" என்பதை தேர்வு செய்திருக்கலாம். உள் நுழைவது கந்தசாமி தான், முனுசாமி இல்லை என்பதை உணர்த்தும் தேர்வுகள் அல்லது செட்டிங்க்ஸ், பாஸ்வேர்ட் முதலியன குக்கீஸில் இருக்கும். இது CC யில் செலக்ட் ஆகி நீக்கப்பட்டிருந்தால் நீங்கள் ஜி மெயில் திறக்கையில் அது மறுபடி உங்களை பாஸ்வேர்ட் கேட்கும், ரகசிய ஒரு-முறை குறி எண்ணை உங்கள் அலைபேசிக்கும் மாற்று ஈமெயில் முகவரிக்கும் அனுப்பும். எனவே CC எதையெல்லாம் க்ளியர் பண்ண வேண்டும் என்பதில் தெளிவு தேவை.

இதில் இரண்டு பாகம் உண்டு - குறிப்பாக விண்டோஸ் சம்பந்தப் பட்டது, இன்னொன்று அப்ளிகேஷன்ஸ் எனப்படும். இரண்டிலும் வேண்டியதைத் தேர்வு செய்யலாம்.



தெரியாததைத் தேர்வு செய்ய வேண்டாம். விட்டு விடவும். குப்பையை நீக்குகிறேன் பேர்வழி என்று கணிணியையே காலி செய்யும் அளவிற்குப் போகலாம். பொதுவாக CC என்ன தேர்வு செய்திருக்கிறதோ அதே போதுமானது.

Analyze என்பதை க்ளிக் செய்தால் CC உங்களுடைய கணிணியில் எவ்வளவு குப்பை இருக்கிறது என்று காட்டும். நீங்கள் RunCleaner ஐ தேர்வு செய்கையில் ஒரு எச்சரிக்கை விடுத்து விட்டு அவையனைத்தையும் நீக்கி விடும்.

b) Registry

இதில் பொதுவாக அனைத்துமே செலக்ட் செய்யப் பட்டிருக்கும். இதிலும் Scan for Issues & Fix selected issues மூலம் குப்பைகளை நீக்கலாம். இதற்கு முன் உங்கள் Registryயை பேக்கப் செய்து கொள்ளக் கேட்கும் CC.

c) Tools

இது மூன்றாவது. என்ன? கண்ட்ரோல் பேனலில் உள்ள Add/Remove Programs போலவே இருக்கிறதில்லையா? இது ஒரு சக்தி வாய்ந்த ஆனால் ஆபத்தான இடம். கவனம் :)

இதன் மூலம் தங்களுக்குத் தேவையில்லாத ப்ரோகிராம்களை நீக்கி விடலாம் (Uninstall). மேலும் கணிணி தொடங்கும் போதே அதன் மென்னியைப் பிடிக்கும் "தொடங்கும் போதே தொடக்கி விடு" அல்லது "Start with Windows" என்று ஆர்வக் கோளாறில் தேர்ந்தெடுத்த பல ப்ரோகிராம்களை சரி கட்ட Startup உதவும்.



உதாரணத்திற்கு நான் ட்ராப் பாக்ஸ் ப்ரோகிராமை தொடங்கும் போதே தொடக்கத் தடை செய்து விட்டேன். ஆனால் இதிலும் கவனம் தேவை நண்பர்களே.

System Restore மற்றும் Drive Wiper என்பதை எல்லாம் பயன்படுத்தத் தேவையிருக்காது, பெரும்பாலும்.அப்படியே தேவைப் பட்டால் Drive Wiperஎன்பது ஒரு ட்ரைவ்வின் மொத்தத்தையும் நீக்கி விடும். கவனம்.

இன்னபிற:

இது தானாகவே அப்டேட் ஏதும் உள்ளதா தனக்கு என்று பார்த்து விட்டு அதைத் தரவிறக்கம் செய்ய உங்கள் அனுமதி கேட்கும். நீங்கள் பின் அதை நிறுவிக்கொள்ளலாம்.

இடது புறம் கீழே இருக்கும் "Online Help" மூலம் இதன் உபயோகம் குறித்து மேலும் பல விவரங்களை அறியலாம்.

இதை ஒரு முறை ஓட்டி விட்டு தங்கள் கணிணி எவ்வாறு வேலை செய்கிறது என்று பாருங்கள்.

பிளாக்கரில் புதிய வசதி- இனி போட்டோ மற்றும் வீடியோவை நேரடியாக Webcam மூலமாக இணைக்கலாம்

|0 comments
 
 
 


கூகுள் நிறுவனம் தற்பொழுது பிளாக்கர் வலைபூக்களுக்கு பல புதிய வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது. சமீபத்தில் Meta tag , Image Properties, Google+ விட்ஜெட் இந்த வரிசையில் தற்பொழுது புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளது. இனி பிளாக்கரில் போட்டோ அல்லது வீடியோக்களை Webcam மூலமாக நேரடியாக உங்கள் வலைப்பூவில் இணைக்கலாம்.


உங்கள் வலைப்பூவில் போட்டோக்களை இணைக்க எப்பொழுதும் செல்வது போல Insert image அல்லது Insert வீடியோ பட்டனை க்ளிக் செய்யுங்கள். அதில் இப்பொழுது புதிதாக From your Webcam என்ற வசதியை காணலாம்



அதில் க்ளிக் செய்து நேரடியாக உங்கள் போட்டோ மற்றும் வீடியோக்களை வெப்கேம் மூலமாக இணைத்து கொள்ளலாம்.

இந்த பதிவு பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

மிகப் File-களை இமெயிலில் அனுப்புவது எப்படி? (2ஜி‌பி வரை)

|1 comments
 
 


சில சமயங்களில் மிகப் பெரிய File களை எப்படி மின்னஞ்சல் மூலம் அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் மின்னஞ்சல் மூலம் 25MB க்கு மேல் அனுப்ப முடியாது. இதற்கு கண்டிப்பாக வேறு சில தளங்களின் உதவி நமக்கு கட்டாயம் தேவை. அப்படிப் பட்ட தளங்களைப் பற்றிய பதிவு இது.




இதில் எந்த தளங்களிலும் நீங்கள் Register செய்யத் தேவை இல்லை.


1.
We Transfer

We Transfer தளம் மிக அருமையாக இந்தப் பணியை செய்து தருகிறது. Add Files பகுதியில் File-ஐ தெரிவு செய்து விட்டு , இமெயில் முகவரி கொடுத்டு விட்டால் போதும். upload ஆகி உங்கள் File குறிப்பிட்ட நபருக்கு சென்று விடும். மிக அதிகம் பயன்படுத்தபடும் தளம் இது எனலாம்.


SizableSend தளமும் இந்தப் பணியை நல்ல முறையில் செய்து தருகிறது. இதில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு 2ஜி‌பி வரை அனுப்ப இயலும். Auto delete files after download என்ற வசதியை தெரிவு செய்தால் அனுப்பபட்ட File Download செய்யப்பட பின் Delete செய்யப்பட்டு விடும்.



இந்தத் தளமும் 2ஜி‌பி வரை File களை மின்னஞ்சல் செய்ய இயலும். 3 ஸ்டெப்களில் உங்கள் வேலை முடிந்து விடுகிறது.



இதே போல அதிக Size உள்ள File களை அனுப்ப உதவும் மற்ற தளங்கள் சில,

4. LargeFilesASAP - 2ஜி‌பி வரை ஒருவருக்கு மட்டும் இலவசமாக அனுப்ப



இதே முயற்சியை நீங்கள் Team Viewer- File Transfer மூலமாக கூட செய்ய இயலும். ஆனால் குறிப்பிட்ட நபர் உங்களுக்கு நம்பிக்கையானவர் என்ற பட்சத்தில் இதை நீங்கள் செய்யலாம். இல்லை என்றால் என்றால் மேலே கூறிய வழிகளை பின் பற்றவும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட File கள் என்றால் அவற்றை WinRar கொண்டு Compress செய்து கொள்ளவும். இங்கே File Size குறைக்க செய்யும் முயற்சிகள் தேவை இல்லை. உங்களின் அனைத்து File களும் 2ஜி‌பிக்குள் என்றால் ஒரே file ஆக அனுப்பவே இதை சொல்கிறேன்.

Popular Posts